Posted

நாடு மற்றும் கலாச்சாரம்

இந்தியா கலாச்சாரம், சடங்குகள்,பாரம்பரியப் பழக்கவழக்கங்களுக்கு பெயர் போனது. இன்று அவற்றில் பலவற்றை “மூடநம்பிக்கை” என்று நாம் முத்திரை குத்தினாலும், அவற்றிற்கு பின்னே அறிவியல் விளக்கங்கள் இருக்கதான் செய்கிறது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரமும் ஆங்காங்கே வாழ்பவருக்கு முக்கியமானதாகும், அஃது அவர்களின் உணர்ச்சிகளுக்கும், நாட்டின் எல்லையைக் குறிப்பதற்கும் றிப்பதற்கும் அவசியம். ஆனால் இந்திய கலாச்சாரத்தின் முக்கியத்துவம் அதனையும் தாண்டி விரிகிறது. இது மனிதனின் மனதளவிலும், உடலளவிலும் நல்வாழ்வு வாழ வழி செய்கிறது. இது நம் அறிவிற்கும் அப்பாற்பட்ட அறிவியலாகும்.
” இதை ஒரு அறிவியலாகக் கருதி,
மனிதன் தன் மேன்மையான
அறுதிநிலைக்கு உயர்வதற்கு
தேவையான வழிகளை, வேறு எந்தக்
கலாச்சாரமும் வகுக்கவில்லை. ”
-சத்குரு

இதன் ஆன்மிக கோட்பாடுகள், வெறும் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வலியுறுத்துபவை அல்ல இவை முறையான செயல்முறைகளைக் கொண்டுள்ளது இதைப் பின்பற்றினால், இவை நம் உடலையும், மனதயும் கூர்மையாக வைத்திடும் எனவே
கலாச்சாரம் காப்போம்!!!!!

– நா. சிவபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *